யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
யாழ். நகருக்கு அண்மையான கலட்டிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 7:00 மணியளவில் இக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இருப்பினும் சிறிலங்காப் படைத்தரப்பு இது பற்றிய தகவல் எதனையும் வெளியிடவில்லை.