தமிழீழ சுகாதார சேவை சுதேச மருத்துவப் பிரிவு மருத்துவர்களுக்கான கலந்துரையாடல் தமிழீழ சுகாதார நடுவப்பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளர் வாமன் தலைமை வகித்தார்.
சுதேச மருத்துவத்தை மேம்படுத்தல் தொடர்பாகவும் எதிர்கால பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை தாயக மருத்துவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் அவசியம் தொடர்பாகவும் தமிழீழ சுகாதார சேவைப் பொறுப்பாளர் ஓவியன் கருத்துகளைத் தெரிவித்தார்.
மேலும் தமிழீழ சுகாதார சேவைகளினால் மூலிகைப் பண்ணை ஒன்று தொடங்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் வளர்ச்சிக்கு மருத்துவர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுதேச மருத்துவர்கள் இக்கலந்துரையாடலில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.