அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவரை சிறிலங்காப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர்.
அம்பாறை அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்த வேல்முருகு (வயது 27) என்பவரை படையினர் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கடத்தியுள்ளனர்.
ஆலையடிவேம்பின் கோளாவில் பகுதியில் வசித்து வரும் இவர், அக்கரைப்பற்று பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்நாள் மாலை 6:45 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.