இரத்தினபுரி மருத்துவமனையில் தாதிமார்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக இதுவரை மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயார்களில் மூவரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், குழந்தை ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மூடப்பட்ட சத்திர சிகிற்சை நிலையம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியே தாதிமார்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராடத்தில் இறங்கியுள்ளனர்.
தொழிச்சங்களின் தூண்டுதல் பெயரில் நடத்தப்படும் இப்பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதாக சிறீலங்கா சுகாதார அமைச்சர் சிறீ பால டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்