09-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தி தாக்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வஜிர குணவர்த்தன தெரிவித்தார்.திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரை பார்வையிடுவதற்காக நேற்று பிற்பகல் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். குறித்த சந்தேக நபரை பார்வையிடுவதற்கு அங்கு கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.இதன்போது குறித்த சிறைச்சாலை அதிகாரிகளை அங்கு சென்ற குழுவினர் அச்சுறுத்தியதுடன் அவர்களை தாக்கியுமுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டார். இந்த சம்பம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் திருகோணமலை காவல்நிலையத்திலும் திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வஜிர குணவர்த்தன தெரிவித்தார். எனினும் இதனை மறுத்துள்ள ரவூப் ஹக்கிம் இது கிழக்கு மாகாணசபைத்தேர்தலை முன்னி;ட்டு பரப்பப்பட்ட பொய் பிரசாரம் என தெரிவித்துள்ளார்
|