கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மதியாபரணம் நம்பிக்கை நிதிய நிதிப்பங்களிப்புடன் 20 உயர்தர
மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று கிளிநொச்சி அரச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் வைத்தியகலாநிதி சத்திமூர்த்தி தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் கருத்துரைகளை வைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவை செயலாளர் பங்கையற்செல்வன், வட்டக்கச்சி ம.வி.அதிபர் கனகசிங்கம், தமிழீழ வைப்பக நிதி ஆளுகை மேலாளர் பாலகிருஸ்ணன், தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் கண்ணன், தமிழீழ கல்விக்கழக நிதிப்பொறுப்பாளர் கவியன்பன் ஆகியோர் வழங்கினார். சிறப்புரையினை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் வழங்கினார்.
நிதி உதவிபெறும் மாவணர்வர்கள் சார்பில் கிளிநொச்சி ம.வி.மாணவி காயத்திரி நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.
இதில் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கற்றலில் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ளும் 20 உயர்தர மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபா வழங்கும் திட்டத்திற்கு அமைவாக ஏப்ரல், மே மாதங்களுக்கான உதவுதொகைகள் நேற்று வழங்கப்பட்டன.
கற்றலில் உயர்ச்சிபெற்ற நல்லதோர் சமூகத்தை உயர்ச்சிபெற்ற நல்லதோர் சமூகத்தை உருவாக்கும் இத்திட்டத்தை உதவிபெற்ற மாணவர்கள் பாராட்டியதுடன் தம்மைப்போல் கற்றலில் இடரை எதிர்கொண்டிருக்கும் திறமையான மாணவர்கள் உயர்ச்சிபெறவைக்க இதுபோன்ற செயல்களுக்கு தொண்டு உள்ளங்கள் முன்வரவேண்டும் என்றும் இத்திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக நிதியை வழங்க முன்வந்த ராஜ்மோகன் அவர்களுக்கும் அதனைஏற்பாடு செய்து கொடுத்த கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை மேம்பாட்டுப்பேரவையினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.