மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிலங்காப் படையினர் கறுக்காய்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.
ஆட்டிலெறிகள்-மோட்டார்கள்-பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் மிகச்செறிவான சூட்டாதரவுடனும் டாங்கிகள், கவச ஊர்திகளின் பீரங்கிச் சூட்டாதரவுடனும் படையினர் இம் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர்.
படையினருக்கு ஆதரவாக வான் படையினரின் கிபீர் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 8:00 மணிவரை மிகச்செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு நேரடி முறியடிப்புத்தாக்குதலை சிங்களப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தினர்.
இம் முறியடிப்புத் தாக்குதலையடுத்து காலை 8:00 மணியளவில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர்.
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவு படையினர் காயமடைந்தனர்.
இம் முறியடிப்புத்தாக்குதலில்
படையினரின் உடலங்கள் - 05
பிகே எல்எம்ஜிக்கள் - 02
ஏகே எல்எம்ஜிக்கள் - 03
ரி-56 -2 ரக துப்பாக்கிகள் - 05
மற்றும் பெருமளவிலான படைக்கலங்கள், வெடிபொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
படையினரின் படைக்காவி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வண்ணம் பின்னோக்கி படையினரால் இழுத்துச் செல்லப்பட்டது.