தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 32 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிறிலங்காப் படையினர் நடத்திய வான் குண்டுத்தாக்குதல்கள், எறிகணை வீச்சு மற்றும் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் தேவாலயத்துக்கு அருகாமைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
கொழும்பில் காணாமல் போனோர் எண்ணிக்கை இதனில் இணைக்கப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.