சிறீலங்கா துணை இராணுக்குழு ஆயுததாரி கருணா நேற்றைய தினம் பிரித்தானிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. போலிக் கடவுச் சீட்டு மோசடியில் பிரித்தானிய குடிவரவு, குடியகழ்வு காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டு நீதி விசாரகளின் பின்னர் இவருக்கு 9 மாதகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆயுததாரி கருணா நேற்று வியாழக்கிழமை பிரித்தானியக் காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் பரவின. இது தொடர்பில் பிரித்தானியக் காவல்துறையினர் தெரிவிக்கையில் பிரித்தானிய குடிவரவு, குடியகழ்வின் கீழ் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத தெரிவித்துள்ளனர்.
இவர் மீது மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் அதிகம் சுமத்தப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் நடத்படவுள்ளதாக மேலும் பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.