கிழக்குத் தேர்தல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலை சுதந்திரமானதும் நியாயமானதுமான வகையில் நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு சார்பில் சட்டத்தரணி சிரிலால் லக்திலக்க உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளர் சட்டமா அதிபர் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.