மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிப்பதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அங்கத்துவத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு யு.என். வொச் உள்ளிட்ட அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக ஜே.வி.பி. கருத்து வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவத்தை நீடிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இலங்கையை மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.