நீதியானதும்,சுதந்திரமானதுமான தேர்தலுகான மக்கள் இயக்கமான கபே(caffe)கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக இன்று தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளவை வருமாறு:கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் இம் மாதம் 8 ஆம் திகதிவரை கிழக்கில் இடம்பெற்றுள்ள தேர்தல் அசம்பாவிதங்களை பட்டியல் இட்டுள்ளது.மாவட்ட அடிப்படையில்,மட்டகளப்பில்- 29 முறைபாடுகளும்,திருகோணமையில்-17 முறைபாடுகளும்,திகாமடுல்லவில்-37 முறைபாடுகளுமாக மொத்தம்- 83 முறைபாடுகளை கபே(caffe) பதிவு செய்துள்ளது.இவற்றைவிட மனோரீதியாகவும் வேட்பாளர்கள் அச்சுறுத்தபட்டுள்ளனர் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.