சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை மூதூரில் அமைந்துள்ள அஸ்ரப் இறங்குதுறையில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்கியழிக்கப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் துறைமுகத்திற்கும் இடைய சிறீலங்காப் படையினரையும் ஏற்றிச் செல்லவும் சிறீலங்காப் படையினருக்கான விநியோகத்தை இதுவரைகாலம் மேற்கொண்டுள்ளது.
தாக்கிய அழிக்கப்பட்டுள்ள ஏ-520 துருப்புக்காவிக் கப்பல் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்து இருக்கும் சிறீலங்காப் படையினருக்கு, வெடி பொருட்களை ஏற்றியிருந்த நிலையில் இக்கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
80 மீற்றர் நீளம் கொண்ட இக்கப்பல், 1970ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கப்பலானது 2003ம் சிறீலங்காப் கடற்படையினரின் பாவனைக்கு வந்துள்ளது. 2007ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கப்பல்களைத் தாக்கியழிக்கு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமை இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.