அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து அம்பாறையிலுள்ள உணவு விடுதியொன்றுக்குள் புலி பயங்கரவாதிகளினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுதாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயக உரிமையை அபகரிக்கும் கொடூரமான செயலாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாறை குண்டு வெடிப்பு தொடர்பாக ஜனாதிபதி செலயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கிழக்கு மாகாண மக்கள் பெற்றுக்கொண்ட ஜனநாயக உரிமை மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற வேளையில் புலிப் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கும் அரசியலமைப்புகள் இணைந்து மேற்கொண்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மூலம் மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.
இன்று நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பில் சகல இன மக்களும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவார்கள். பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பெற்றுக்கொள்ளவிருக்கின்ற ஜனநாயக உரிமை எக்காரணம் கொண்டும் பின்தள்ளப்படமாட்டாது