தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சிலர் அம்பாறை மாவட்டத்தில் வாக்கு மோசடி செய்ய முயற்சித்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திகாமடுல்ல தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வைத்தே அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது.
தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆயுததாரிகள் சிலர் ஜேஎப.-3114, கேடி-3787, 32-3387 ஆகிய இலக்கமிடப்பட்ட வாகனங்களில் வந்து வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சித்த பொலிஸ் அத்தியட்சகர் சமரசேகரவினால் கைது செய்யப்பட்டதாகத் தெரியவவருகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கண்காணிப்பு குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.