கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக விவாதிப்பதற்கு பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விவாதிப்பதற்கு பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தேர்தல் வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிப்பதற்கு பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.கிழக்கில் இடம்பெறும் தேர்தல் மோசடிகளை மறைப்பதற்காகவே பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.