முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணிக்கு வடக்கே இன்று பிற்பகல் 12.15 மணியளவில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில், வெடிப்பொருள் கிடங்குடன் கூடிய பீரங்கி நிலை ஒன்று நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பீரங்கி நிலையிலிருந்தே விடுதலைப் புலிகள் வெலிஓயா பிரதேசத்தில் உள்ள ஜனகபுர, கிரிஇப்பான்வௌ போன்ற சிங்களக் கிராமங்கள் மீது எறிகணை தாக்குதல்கள் நடத்துவதாகவும், இதனாhல் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.