கிழக்கு மாகாணசபை தெரிவுக்கான வாக்கெடுப்பு,முடிவடைந்துள்ளது.கிழக்கில் இன்று இடம்பெற்ற முக்கிய வாக்கெடுப்பில்,மக்கள் சற்று சுதந்திரமாக வாக்களிக்க கூடிய நிலை காணப்பட்டுள்ள போதும்,கிழக்கின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்,மற்றும் மிரட்டல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
காலை பொழுதில் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுள்ளபோதும்,
நண்பகலுக்கு பிற்பாடு வாக்களிப்பு சற்று மந்தநிலையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும்,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் திருகோணமலை குச்சவெளி பகுதியில், பொதுமக்கள் வாக்களிப்பின்போது,அடையாளம் தெரியாத நபர்களினால் அச்சுறுத்தபட்டுள்ளதாகவும்,அம்பாறை தெஹியத்த கண்டி பகுதியில்,மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தலைமையிலான குழுவினர் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும்,இதேவேளை மற்றொரு தேர்தல் வன்முறை சம்பவம் ஜே.வி.பி. ஆதரவாளர்களால் தெஹியத்தகண்டியில் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை தேர்தல் முடிவுகள்,இன்று நள்ளிரவுக்கு பிற்பாடு வெளிவரும் எனவும், தெரிவிக்கபடுகிறது