ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற வைத்ததன் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கிழக்கு மாகாண மக்கள் தமது கட்சியை வெற்றி பெற செய்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்திட்டங்களுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் எனவும், தமது வெற்றியானது ஜனநாயகத்துக்கு கிடைத்த பாரிய வெற்றி எனவும் அவர் கூறினார்.