கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையான்குழுவின் தலைவர் பிள்ளையான் அதிபடியான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதன் காரணமாக முதலமைச்சராக வரக்கூடியதான அதிக சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தமிழ் தலைமை வேட்பாளராக பிள்ளையானும் முஸ்லிம் தலைமை வேட்பாளராக ஹிஸ்புல்லாவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் விருப்புவாக்கும் எண்ணும் நடவடிக்கைக்கு அமைய பிள்iளாயான் 41,936 வாக்குகளை பெற்றுள்ளதாகவும் ஹிஸ்புல்லா 359,949 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சராக பிள்ளையான் தேர்வுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.