சர்வதேச மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையை நீக்குமாறு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரியுள்ளமை ஓர் சூழ்ச்சித்திட்டம் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இதுவரையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்கச்சார்பான இவ்வாறான முறைப்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்க உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் மனித உரிமைகள் அமைச்சு என்பன கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையின் ஆட்சேபத்தை தெரிவிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு சாதகமான நோக்கிலேயே காணப்படுவதாக அமைச்சர் சமரசிங்க சிலுமின வார இதழுக்கு தெரிவித்துள்ளார்.