மணலாறிலும், மன்னாரிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2 படையினர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட விபரம்:
மணலாறு ஜனகபுர வடக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் பாலம்பிட்டிப்பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.