யாழ்ப்பாணத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கேயலின் சிறிலங்காப் படைத்தரப்பினரையும் யாழ். அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழில் உள்ள சிறிலங்காவின் 51 ஆவது படை டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் மார்க்கையும் 52 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.பெரேராவையும், யாழ். படைத்தளபதி சந்திரசிறியையும் போல் கெயலின் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடிய அவர், மணல்காடு, காங்கேசன்துறை சிறிலங்காப் படைத்தளங்களுக்கும் சென்றார்.