திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்ட சிறீலங்கா கடற்படையினருக்குச் சொந்தமான ஏ 520 வழங்கல் கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு அடியில் சிறீலங்காப் கடற்படையினிரின் சுழியோடிகளால் உயிரிழந்து கரும்புலிகளது உடலங்களின் சிதைவுகளையும், நீருக்கடியில் செல்வதற்கான சாதனங்களையும் மீட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூழ்கடிக்கப்பட்ட கப்பலை மீட்குகம் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி மிகவும் ஆழம் குறைந்து காணப்படுவதாகல் கப்பலை கடற்படையினர் விரையில் மீட்பர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.