வடமராட்சிபகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை வீதித்தடைகளை ஏற்படுத்தியிருந்தனர் வல்லையிலிருந்து பருத்தித்துறை நகர்வரையான பகுதிகளிலேயே இவ்வீதித்தடை ஏற்படுத்தப்பட்டது.
படையினரது வாகனத்தொடரணி செல்வதாகக்கூறியே இத்தடை ஏற்படுத்தப்பட்டது.
இதேவேளை வடமராட்சி சக்கோட்டைப்பகுதியில் சிறிலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு 8.00 மணியிலிருந்து 11.00 மணிவரை இத்தேடுதல் வேட்டை இடம்பெற்றது. இதன்போது இளைஞர்கள் சிலர் படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மூன்று வீடுகளில் படையினர் மோட்டார்சைக்கிள்களை பறித்துச்சென்றுள்ளனர்.