கிழக்குத் தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமை தெளிவாக புலனாவதாக அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளா கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் எதிர்காலத்தை கிழக்கு மாகாண தேர்தல் வெற்றி பாதகமான முறையில் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது திருத்த பரிந்துரைகளுக்கு கிழக்கு வாழ் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். லக்பிம நாளேட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்தக் கருத்துக்களைத் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் திடீரென ஒத்தி வைக்கப்படவில்லை எனவும் எந்தவொரு விசேட காரணங்களுக்காகவும் பாராளுமன்ற ஒத்தி வைப்பு நிகழவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரண்டு தாக்குதல் விமானங்கள் உள்ளன எனவும் அவற்றைக் கொண்டு கொழும்பில் தாக்குதல் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.