வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம விடுத்த வேண்டுகோளையடுத்து பொதுநலவாய மன்றத்தில் பாகிஸ்தான் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய அமைச்சர்கள் குழு நேற்று லண்டனில் கூடிய வேளை அங்கு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், பொதுநலவாய மன்றத்தில் பாகிஸ்தான் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என 9 அங்கத்தவர்களைக் கொண்ட நடவடிக்கைக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தானில் முழு அளவில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து பொதுநலவாய நடவடிக்கைக் குழுவின் நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளதால் நடவடிக்கைக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் பாகிஸ்தான் விவகாரம் தொடர்ந்தும் இருக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பொதுநலவாய அமைச்சர்களின் நடவடிக்கைக் குழு வெளிவிவகார அமைச்சரின் பிரேரணையை ஏனமனதாக ஏற்றுக்கொண்டது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் சிஷாட் சௌத்திரி வெளிவிவகார அமைச்சருக்கு தொலைபேசி மூலம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.(தா)