யாழ்ப்பாணம் வடமாராச்சியில் தங்கசங்கிலி ஒன்று பசு ஒன்றின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வீட்டுக்காரர் வெளியில் சென்றிருந்த போது,பசு பானையில் இருந்து நெல்லை சாப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த நெல்லுடன் பாதுகாப்புக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கசங்கிலியையும் அது சாப்பிட்டிக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதனையடுத்தே பசுவின் வயிற்றில் இருந்து சங்கிலி மீட்கப்பட்டது. இதேவேளை இந்தியாவில் இதுபோன்று பசு ஒன்றின் வயிற்றில் இருந்து,நாலாயிரம் பொலித்தீன் பைகள்,மற்றும் பெண்கள்,குழந்தைகளின் ஆடைகள் என்பன மீட்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது..