மட்டக்களப்பு, காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனையிலுள்ள மக்கள் விடுதலைப் முன்னணி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை 2.45 மணியளவில் இனத்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் முஹம்மட் றவூப்புக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
பாலமுனையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தின் பின்புறம் அவரது இல்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 147 விருப்பு வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.
இந்த தாக்குதலில் தமக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக முஹம்மட் றவூப் காத்தான்குடி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.