யாழ். வடமராட்சி கரவெட்டியில் ஈபிடிபி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும், சட்டத்திரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன