கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் முன்னணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அதிகூடிய விறுப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.