கொழும்பு மெகசின் சிறையில் இருந்து காலி பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகளில் 13 பேர் நேற்று மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பில் அவர்களுக்கு இன்று வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளமையை அடுத்தே இவர்கள் மெகசீனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்கள் மெகசீன் சிறைச்சாலையிலேயே தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவார்களா? அல்லது மீண்டும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்களா? என்ற விடயம் தெரியவரவில்லை. இதேவேளை கடந்த வாரம் பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.