எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாது என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை உயிரிழந்த படையினரின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரணைக் கொல்லுவதற்கு படையினர் தயாராக உள்ளனர். அவரை அழிக்கும் நோக்கத்தை எமது படையினர் நெருங்கியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.