மே மாதம் முதல் நாளிலிருந்து இதுவரை 41 படையினர் கொல்லப்பட்டு மேலும் 155 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற வாராந்த நிலவரம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 1ம் நாள் தொடக்கம் வடக்கு போர் முனைகளில் இன்றைய நாள் வரை 41 படையினர் கொல்லப்பட்டனர். 155 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கில் படையினர் மன்னாரில் அடம்பன் வரையும், வவுனியாவில் பாலம்பிட்டி வரையிலும் எமது படையினர் முன்னேறியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட படையினரும் வடக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.