கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் தகுதியற்றவர்கள் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றி பெற்ற இந்த இருவரும் முதலமைச்சர் பதவிக்கு மோதுவது வேடிக்கையாக உள்ளது. இந்த இருவருமே முதலமைச்சர் பதவிகு வருவதற்கு அடிப்படையில் தகுதியற்றவர்கள் அருகதையற்றவர்கள். இதுவே எமது நிலைப்பாடு என ரவூவ் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.