கரவெட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சமூக சேவைகள் அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்துக்கான மன்றத்தின் செயலாளருமான மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடல் நேற்று கொழும்புக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது.
கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள அன்னாரது பூதவுடல் இன்று காலை முதல் பிற்பகல் 1 மணிவரை பாக் வீதியில் உள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
அதனைத் தொடர்ந்து பொரளை ஜயரத்ன மலர்ச்சாலைக்கு கொண்டு வரப்படும். பூதவுடல் மாலை வரை அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
அஞ்சலியினையடுத்து இறுதிக்கிரியைகள் பொரளை கனத்தை இந்து மயானத்தில் மாலை 5 மணியளவில் இடம்பெறும் என்று ஈ.பி.டி.பி.யினர் தெரிவித்துள்ளனர்.