திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை செயலகத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபை அமர்வுகள் நடைபெறவுள்ளமையை அடுத்தே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்திற்குள், முதலமைச்சர் அலுவலகம், அமர்வுகளுக்கான மண்டபம் மற்றும் அமைச்சு அலுவலகங்கள் என்பன அமைந்துள்ளன.