உலகின் மிக மோசமான தீவிரதவாத இயக்கமென பெடரல் உளவு நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலங்கை அரசாங்கம் அடையும் ஒவ்வொரு தோல்வியும் சர்வதேச பயங்கரவாதத்தின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தில் ஆற்றிய விசேட உரையின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களையும், பெண்களையும் பயன்படுத்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்கொலைக் குண்டுதாரிகள் அணியும் விசேட அங்கியை முதல் முதலாக விடுதலைப் புலிகளே தயாரித்ததாகவும், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் பூராவும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் வியாபிக்க புலிகளே முன்னோடிகளாக செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உயிர்களை பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தனித்து போராடுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.