கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது செய்யப்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளில் நூற்றுக்கு 90 வீதமானவைதீர்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது 132 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன. தீர்க்க முடியாத முறைபாடுகளை நீதிமன்றத்தின் மூலம் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு விவகார பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.