தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் நாளைய தினம் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக நாளை பிற்பகல் 1.30 அளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் கிழக்கின் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.