அரசாங்கம் கிழக்கில் இனவாதத்தை வளர்ப்பதாக சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்தி;ப்பு இன்று பிற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்த்தனர்.
முஸ்லிம்கள் மத்தியில் அவர்கள் உரையாற்றும்பேது கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள வாக்களியுங்கள் என்று கூறினர். தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் உரையாற்றியபோது வடக்கையும் கிழக்கையும் இணைத்த தாயகத்தை உருவாக்க வாக்களியுங்கள் என்று கூறினார்கள்.
நாட்டில் இனவெறிக்கு தூபமிட்டவர்களும் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தவாகளும் ஐ.தே.கட்சியினர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் எமது ஜனாதிபதி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்