சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல்
சரத்பொன்சேகா இன்று காலை யாழ் குடாநாட்டுக்குப்
பணயம் செய்துள்ளார். பலாலி கூட்டுப்படைத் தளத்திற்குச் வானூர்தி மூலம் தரையிறங்கிய சரத் பொன்சேகாவை யாழ் மாவாட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ வரவேற்றார்.
சிறீலங்காப் படையினரின் யாழ் கட்டளைப் பீடத்தில் பிறீகேட் படைத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான சந்திப்பு சரத் பொன்சேகா தலைமையில் இடம்பெற்றது.
சந்திப்பில் தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் யாழ் குடாநாட்டின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து யாழ் மாவட்டத் தளபதி சந்திரசிறீ விளக்கம் அளித்துள்ளார்.