ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை மனித உரிமை செயற்பாடுகள் குறித்த பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் சிறந்த வரவேற்பளித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் பற்றி விளக்குவதற்கு சுமார் மூன்று மணித்தியாலங்கள் கிடைக்கப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம் தொடர்பாக அனைத்து நாடுகளும் அதிக முனைப்பு காட்டியதாக அவர் தெரிவித்துள்ளாh மிகப் பயங்கரமான தீவிரவாத இயக்கமொன்றின் செயற்பாடுகள் காணப்படும் இலங்கையில் இவ்வாறான சிறந்த மனித உரிமை செயற்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பாக தாம் மகிழ்ச்சியடைவ்தாக குறித்த நாடுகள் தெரிவித்ததாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.