லண்டனில் இருந்து கருணா இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதும் கருணாவைக்குகொண்டு மன்னார் பிரதேசத்தில் துணைக்குழு ஒன்றை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் பிரதேசத்தில் ஏற்கனவே பல்வேறு துணைக்குழுக்கள் செயற்பட்டுவருகின்றபோதிலும் அப்பகுதியில் வலுவான ஆயுதக்குழுக்கள் இல்லாத காரணத்தினால் மன்னாரில் படையினர் பல்வேறு இழப்புகளை சந்தித்துவருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தை போன்று மன்னாரையும் மீட்ப்பதற்கு பலமான ஆயுதக்குழுவொன்றின் தேவை உணரப்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மன்னாரில் செயற்படும் ஆயுதக்குழுக்களை ஒன்றிணைத்து பலமான ஆயுதக்குழுவொன்றை அரசு உருவாக்க எண்ணியுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.