கொழும்பு கோட்டை சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணிக்கு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 காவல் துறையினர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து உந்துருளி ஒன்றுடன் மோதியே போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணியளவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் விஹாரைக்கு முன்னால் உள்ள சோதனை சாவடிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் என் ஏ 2743 என்ற இலக்கத்தை கொண்ட பேரூந்து ஒன்றும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த இந்த பேருந்து பாதுகாப்பு படையினரை ஏற்றிசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொல்லப்பட்டவர்களின் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். சம்பவத்தில் காயமடைந்த சுமார் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கடமைக்காக வந்த கலகத்தடுப்பு காவல்துறையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.