அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் தமிழ் பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு அக்கரைப்பற்று 4ஆம் குறிச்சி ஜின்னா வீதியை சேர்ந்த அக்பர் மிலார்(27வயது) என்ற ஆட்டோ சாரதியே இவ்வாறு அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு மூவர் இவரது ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச்சென்றுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை காணாது உறவினர்கள் தேடிய போது இன்று வெள்ளிக்கிழமை ஆலங்குளம் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதியில் இருந்து இவரது சடலமும் ஆட்டோவும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை தொன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.