சிறீலங்கா காவல்துறை திணைக்களத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் அவர்களுடைய சக கீழ் மட்ட அதிகாரிகளை நடத்துவதில் அநீதி இழைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் போது பிரதியமைச்சர் ஒருவரினால் தாக்கப்பட்ட மூதூர் காவல்துறை அதிகாரி விடயத்தில் உயர்மட்ட அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தினால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பான உயர்மட்ட காவல்துறைத் அதிகாரி ஒருவர் குறித்த சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
காவல்துறைத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளினால் சக கீழ் மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அநீதி இளைக்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாலித்த ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.