சிறீலங்காவின் துணை இராணுவக்குழுவின் தலைவரும் ஆயுததாரியுமான பிள்ளையான் என்று அழைக்கப்படும்சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வெற்றியீட்டிய ஆளும் அரசாங்க வேட்பாளர்கள் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.