கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, பிள்ளையானின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்குஒருபோதும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கிழக்க மாகாணசபை ஆளுநருக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிஸ் கட்சி சார்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பிள்ளையானைத் தெரிவு செய்தமை அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான மூவர் குழு தனித்து இயங்கவுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் அம்பாறை மற்றும் திருகோணமலையில் ஆளும் அரசாங்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அதாவுல்லா தலைமையிலான முஸ்லிம் வேட்பாளர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியில் ஹிஸ்புல்லா ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.