அட்டன் நகரில் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் இன்று சனிக்கிழமை காலை முதல் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. பொலிஸார் இராணுவத்தோடு இணைந்து விமான படையினரும் இச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவை ,நோர்வூட்,மஸ்கெலியா, டிக்கோயா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள்,பயணிகள் பஸ் என்பன அளுத்கலை சந்திக்கருகில் விசேடசாக அமைக்கப்பட்ட சோதனை சாவடிக்கருகில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
பயணிகள் இறக்கப்பட்டு அவர்களின் பொதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் என்பன பரிசோதிக்கப்பட்டன.
இதே வேளை கொழும்பு , நாவலப்பிட்டி, கண்டி,தலவாக்கலை,நுவரெலியா போன்ற இடங்களில் இருந்து வந்த வாகனங்கள் அட்டன் மல்லியப்பு சந்திக்கருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.